சீனாவில் உள்ள ஸ்டோர் மற்றும் அலுவலகங்களை மூடும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினை தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் சீனாவில் உள்ள தமது பணியாளர்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளதுடன் அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளன.

இதேபோன்று கூகுள் நிறுவனமும் அங்கு உள்ள தனது அனைத்து ஆப்பிள் ஸ்டோர்கள் மற்றும் அலுவலகங்கள் என்பவற்றினை மூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி எதிர் வரும் பெப்ரவரி 9 ஆம் திகதி வரை ஸ்டோர்கள் மற்றும் அலுவலங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.

பின்னர் நிலைமையை கண்காணித்து மீண்டும் ஸ்டோர்கள், அலுவலகங்களை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக் நிறுவனம் தனது பணியாளர்களை சீனாவில் உள்ள அலுவலங்களுக்கு பணியாற்ற செல்ல வேண்டாம் என அறிவித்திருந்ததுடன் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கோரிக்கைவிடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்