உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ZTE நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வாக Mobile World Congress நிகழ்வு காணப்படுகின்றது.

இவ் வருடம் பார்ஸிலோனாவில் இடம்பெறும் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை என LG நிறுவனம் ஏற்கனவே தெரிவித்து பின்வாங்கியுள்ளது.

தற்போது உலகை ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கமே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ZTE நிறுவனமும் குறித்த நிகழ்வில் கலந்துகொள்வதில்லை என்ற தீர்மானத்தினை எடுத்துள்ளது.

இதனை அடுத்து மேலும் சில நிறுவனங்கள் இந்த முடிவினை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எவ்வாறெனினும் Mobile World Congress நிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...