ஸ்டோர்களை மீண்டும் திறப்பதில் தாமதம் காட்டும் ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஆப்பிள் நிறுவனம் சீனாவிலுள்ள தனது ஸ்டோர்களை தற்காலிகமாக மூடியிருந்தது.

எனினும் நாளைய தினம் முதல் மீண்டும் ஸ்டோர்களை திறந்து பயனர்களுக்கு சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஸ்டோர்களை மீண்டும் திறப்பதில் தாமதம் ஏற்படும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் திறப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இது தொடர்பான அப்டேட்களை தொடர்ந்தும் பயனர்களுக்கு வழங்கப்படும் எனவும் ஆப்பிள் உறுதியளித்துள்ளது.

இதேவேளை ஸ்டோர்கள் மூடப்பட்டிருப்பதனால் ஆப்பிள் ஐபோன் விற்பனை பாதிக்கப்பட்டிருப்பதுடன் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்