பல மில்லியன் யூரோக்கள் நஷ்டஈடு செலுத்தவேண்டிய நிலையில் ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தொழில்நுட்ப உலகில் பல்வேறு நிறுவனங்களும் கடந்த காலங்களில் மிகப்பெரிய நஷ்டஈட்டினை செலுத்தி வந்துள்ளன.

பெரும்பாலும் இந்நிறுவனங்களால் பயனர்கள் பாதிக்கப்பட்டமையே இதற்கு பிரதான காரணமாக காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் தற்போது மீண்டும் பெரும் தொகையை நஷ்டஈடாக செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பழைய ஐபோன்கள் தற்போது மிகவும் மந்தமான வேகத்திலேயே செயற்பட்டு வருகின்றன.

இதற்கு ஆப்பிள் நிறுவனமே காரணமாகும்.

அதாவது பயனர்கள் ஆப்பிள் நிறுவனத்தில் மின்கலங்களை மாற்றீடு செய்யும்போது ஐபோன்களை மந்தமாக செயற்படக்கூடியவாறு மாற்றியமைத்து வழங்குவதாக புகார் கூறப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் சுமார் 25 மில்லியன் யூரோக்களை நஷ்டஈடாக செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்