சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் தாக்கமானது உலகின் பல பாகங்களிலும் வருகின்றமை அறிந்ததே.
இந்நிலையில் தற்போது தென்கொரியாவில் இதன் தாக்கம் உணரப்பட்டுள்ளது.
அதாவது அங்குள்ள சாம்சங் ஸ்மார்ட் கைப்பேசி உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர் ஒருவரிற்கு கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குறித்த நிறுவனத்தின் பணிகள் நிறுத்தப்பட்டு இன்றைய தினம் வரை மூடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள நபரிலிருந்து ஏனையவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.