500 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்தி ஆப்பிள்: ஏன் தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

வாடிக்கையாளர்களின் முறையீட்டினை ஏற்றுக்கொண்ட ஆப்பிள் நிறுவனம் சுமார் 500 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனமானது தனத ஐபோன் பாவனையாளர்களுக்கான விசேட சேவை ஒன்றினை வழங்கிவந்தது.

அதாவது ஐபோன்களின் பாவனைக்கு உதவாத மின்கலங்களை மாற்றிக் கொடுக்கும் சேவையாகும்.

எனினும் இதன்போது குறித்த ஐபோன்களின் வேகங்களை மந்தப்படுத்தும் செயற்பாட்டினையும் இரகசியமாக செய்து வந்துள்ளது.

இதனை அறிந்துகொண்ட வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

இதன் அடிப்படையில் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்ட நிலையில் ஆப்பிள் நிறுவனத்தின் குறித்த செயற்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 500 மில்லியன் டொலர்களை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

இதனை ஆப்பிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் சுமார் 25 டொலர்கள் கிடைக்கப்பெறும் என தெரியவருகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்