முன்னணி இன்டர்நெட் நிறுவனங்கள் வழங்கியுள்ள வாக்குறுதி

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
#S

தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் முடங்கிப்போய் உள்ளன.

மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத நிலை காணப்படுவதுடன், பொது சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன.

எனவே மக்கள் தாம் பயன்படுத்தும் சேவைகளுக்கான சந்தா பணங்களை கட்ட முடியாத நிலையில் காணப்படுகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் குறித்த சேவைகளை தொடர்ந்து பெறுவதில் சிக்கல் ஏற்படும்.

இதனைக் கருத்தில்கொண்டு அமெரிக்காவின் சில முன்னணி இன்டர்நெட் நிறுவனங்களிடம் வேண்டுகோள் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது அடுத்த 60 நாட்களுக்கு எந்தவித சந்தா கட்டப்படாது விடினும் சேவையை துண்டிக்க வேண்டாம் என்பதாகும்.

இதற்கு அந்நிறுவனங்களும் சாதகமான பதிலை வழங்கியுள்ளன.

எனவே Comcast Corp, AT&T Inc மற்றும் Verizon Communications Inc என்பனவற்றில் சேவைகளை அடுத்த 60 நாட்களுக்கு தொடர்ந்து பெற முடியும்.

எனினும் இதற்கான கட்டணத்தினை குறித்த கால எல்லைக்கு பின்னர் செலுத்த வேண்டும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்