அவசர அவசரமாக மேலும் 1 லட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தும் அமேஷான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகின் முன்னணி மின் வணிக நிறுவனமான அமேஷான் தற்போது மேலம் 1 இலட்சம் பணியாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

தற்போது உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர்.

இதனால் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இவ்வாறான மின் வணிக நிறுவனங்களையே நாடுகின்றனர்.

தற்போது அதிகரித்துள்ள பயனர்களின் எண்ணிக்கை காரணமாக அவர்களுக்கான சேவையை வழங்குவதற்கு போதிய பணியாளர்கள் இல்லாமையினால் இந்த முடிவினை அமேஷான் எடுத்துள்ளது.

அமெரிக்காவை தளமாகக் கொண்ட இந்த பணி வெற்றிடங்களில் முழு நேரப் பணி மற்றும் பகுதிநேரப் பணி என்பன அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்