புதிய அறிமுகம் செய்த சாதனங்களின் கொள்வனவை மட்டுப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் புதிய ஐபோன் 9, ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏயார் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது.

எனினும் இவற்றினை ஒருவர் கொள்வனவு செய்யக்கூடிய எண்ணிக்கையினை மட்டுப்படுத்தியுள்ளது.

அதாவது ஒன்லைன் ஊடாக ஓடர் செய்யும்போது ஒருவர் ஒரே நேரத்தில் இரு சாதனங்களையே அதிகபட்சமாக கொள்வனவு செய்யமுடியும்.

ஆசிய நாடுகளில் இதனை ஏற்கனவே நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளது ஆப்பிள்.

இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகள், கனடா மற்றும் அமெரிக்காவிலும் இதனை நடைமுறைக்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை தற்போது கொரோனா வைரஸ் பரவும் சூழ்நிலையில் குறித்த சாதனங்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...