ஆப்பிளின் iOS சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷன்களை தரவிறக்கம் செய்து நிறுவுவதற்கு ஆப்ஸ் ஸ்டோர் பயன்படுத்தப்படுகின்றமை தெரிந்ததே.
இந்த ஆப்ஸ் ஸ்டோர் ஆனது தற்போது 155 நாடுகளில் கிடைக்கப்பெறுகின்றது.
இந்நிலையில் மேலும் 20 நாடுகளுக்கு ஆப்ஸ் ஸ்டோரினை விஸ்தரிப்பதற்கு ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதனை இவ்வருட இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவதற்கும் எண்ணியுள்ளது.
எனினும் எந்த நாடுகளில் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பது தொடர்பான தகவல்களை இதுவரை வெளியிடவில்லை.
இவ்வாறிருக்கையில் தற்போது உள்ள 155 நாடுகளில் காணப்படும் அப்பிளிக்கேஷன் iOS அப்பிளிக்கேஷன் டெவெலொப்பர்கள் இதுவரை 155 பில்லியன் டொலர்கள் வரை வருமானம் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.