ஆப்பிள் ஸ்டோர்கள் மீண்டும் எப்போது திறக்கப்படும்?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சீனாவிற்கு வெளியில் பல்வேறு நாடுகளிலும் உள்ள தனது ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவனம் மூடியமை தெரிந்ததே.

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் குறித்த ஸ்டோர்கள் திறக்கப்படும் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருந்தது.

ஆனால் தற்போதுவரை கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்தபாடில்லை.

தனால் அமெரிக்காவில் உள்ள ஸ்டோர்கள் எதிர்வரும் மே மாதம் வரை மூடப்பட்டிருக்கும் என ஆப்பிள் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலானது குறிப்பாக தனது பணியாளர்களுக்கே ஆப்பிள் விடுத்துள்ளது.

தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் பணியாளர்கள் பலர் வீட்டிலிருந்தே தமது பணிகளை தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்