2020 இன் முதலாவது காலாண்டிற்கான வருமானத்தை வெளியிட்டது சாம்சுங்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு காலாண்டிற்குமான தமது வருமானம் தொடர்பான தகவல்களை வெளியிடுவது வழக்கமாகும்.

இந்த வரிசையில் 2020 ஆம் ஆண்டிற்கான முதலாம் காலாண்டின் வருமானத்தினை வெளியிட்டுள்ளது.

இதன்படி சுமார் 55.33 ட்ரில்லியன் தென்கொரிய வொன்களை வருமானமாக ஈட்டியுள்ளது.

இந்த பெறுமதியானது ஏறத்தாழ 0.046 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

எனினும் கடந்த வருடத்தின் இதே காலாண்டில் ஈட்டப்பட்ட வருமானத்தினை விடவும் இவ் வருடம் குறைவடைந்துள்ளது.

அதாவது 7.6 சதவீதத்தினால் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தலே இதற்கு காரணமாகும்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்