கொரோனா மருத்துவப் பணியில் ஈடுபடுபவர்களுக்காக ஆப்பிள் செய்யும் காரியம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகெங்கிலும் கொரோனா இடர் காரணமாக மருத்துவப் பணியாளர்கள் ஓய்வின்றி பணியாற்றிவருகின்றனர்.

இவர்களுக்காக பல்வேறு நிறுவனங்கள் தாமாக முன்வந்து உதவி வருகின்றன.

இந்த வரிசையில் ஆப்பிள் நிறுவனம் மருத்துவப் பணியாளர்களுக்கு தேவையான முகக்கவசத்தினை வழங்கி வருகின்றது.

இதுவரை சுமார் 7.5 மில்லியன் முகக்கவசங்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

இதன்படி வாரம் தோறும் ஒரு மில்லியனிற்கும் அதிகமான முகக்கவசங்களை இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் அனுப்பி வருகின்றது.

இது குறித்த கருத்து தெரிவித்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் கூக் தாம் 30 மில்லியன் வரையான முகக்கவசங்களை இவ்வாறு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்