தனது பெரும்பாலான ஸ்டோர்களை திறக்க தயாராகும் ஆப்பிள் : எங்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

உலகளாவிய கொரோனா தொற்று காரணமாக கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பல்வேறு நாடுகளிலும் உள்ள தனது ஸ்டோர்களை ஆப்பிள் நிறுவனம் மூடியமை தெரிந்ததே.

இதனால் மற்றைய நிறுவனங்களைப் போன்றே ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுகம் விற்பனையில் வீழ்ச்சி கண்டிருந்தன.

இந்நிலையில் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள அனேகமான ஸ்டோர்களை மீண்டும் திறப்பதற்கு ஆப்பிள் தீர்மானித்துள்ளது.

மொத்தமாக உள்ள 22 ஸ்டோர்களில் 21 ஸ்டோர்களை இவ் வாரத்தில் திறக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் சிட்னியில் உள்ள ஸ்டோர் மாத்திரம் மீள்திருத்தப் பணிகளுக்காக தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்டோர் ஆனது கடந்த ஜனவரி மாதமே மீள்திருத்தப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த போதிலும் கொரோனா தாக்கம் காரணமாக மீள்திருத்தப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்