தனது மொபைல் தொழிற்சாலையை மீண்டும் திறக்கும் சாம்சுங் நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி மொபைல் வடிவமைப்பு நிறுவனமான சாம்சுங்கிற்கு இந்தியாவிலும் மொபைல் தொழிற்சாலை இருக்கின்றமை தெரிந்ததே.

உத்திரபிரதேசத்தின் நொய்டாவிலுள்ள குறித்த தொழிற்சாலையினை மீண்டும் திறப்பதற்கு தேவையான அனுமதியை மாநிலங்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இத் தொழிற்சாலையானது பகுதி அளவிலேயே தொழிற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன்படி 30 சதவீதமான தொழிலாளர்களுடன் இயங்கவுள்ளது.

இந்த தொழிற்சாலையானது 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை மீளவும் இயக்கவுள்ள நிலையில் ஸ்மார்ட் கைப்பேசி விற்பனையை மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு சாம்சுங் நிறுவனத்திற்கு கிடைக்கவுள்ளது.

தற்போதுள்ள நிலையில் சாம்சுங்கின் eStore, அமேஷான் மற்றும் பிளிப்கார்ட் என்பவற்றின் ஊடாக கைப்பேசிகளை விற்பனை செய்யும் வாய்ப்பு அந்நிறுவனத்திற்கு காணப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்