பிரபல Virtual Reality நிறுவனத்தினை வாங்குகின்றது ஆப்பிள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனமான ஆப்பிள் Virtual Reality தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றினை வாங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி VR ஒளிபரப்பு சேவையினை வழங்கிவரும் NextVR எனும் நிறுவனத்தினையே கொள்வனவு செய்யவுள்ளது ஆப்பிள்.

இதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவருவதாக Bloomberg தகவல் வெளியிட்டுள்ளது.

சுமார் 100 மில்லியன் டொலர்களை வழங்கி குறித்த நிறுவனத்தினை தனதாக்குவதற்கு ஆப்பிள் முனைந்துவருவதாகவும் Bloomberg தெரிவித்துள்ளது.

NextVR நிறுவனமானது ஏற்கணவே NFL எனும் விளையாட்டுத்துறைசார்ந்த நிறுவனத்துடன் இணைந்தே பயணித்துவருகின்றது.

மேலும் இந்நிறுவனம் 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் தற்போது 115.5 மில்லியன் டொலர்கள் வரை பெறுமதி உடையதாகவும் காணப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்