ஹுவாவி நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை: சாம்சுங்கிற்கு பேரிடியாக அமையுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

சாம்சுங் நிறுவனம் விரைவில் மிகவும் விலை குறைந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சீனாவின் ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான ஹுவாவியும் விலை குறைந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

தற்போதுள்ள நிலையில் சாம்சுங், Motorola மற்றும் ஹுவாவி நிறுவனங்கள் ஏற்கணவே மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்துள்ளன.

அத்துடன் Mate X எனும் உலகின் வேகம் கூடிய 5G கைப்பேசியினையும் ஹுவாவி அறிமுகம் செய்திருந்தது.

இதேவேளை ZTE, LG ஆகிய நிறுவனங்களும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்