Giphy நிறுவத்தினை வாங்கும் பேஸ்புக்: காரணம் இதுதான்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

முன்னணி அனிமேஷன் கோப்புக்களை (GIF) பகிரும் இணையத்தளமாக Giphy விளங்குகின்றது.

உலக அளவில் மக்களால் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இத் தளத்தினை பேஸ்புக் நிறுவனம் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராம் தளத்துடன் இணைக்கும் நோக்கிலேயே கொள்வனவு செய்யப்படுகின்றது.

இதன்படி Giphy நிறுவனத்தினை கொள்வனவு செய்வதற்கு 400 மில்லியன் டொலர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றில் Giphy தளத்திலுள்ள அனிமேஷன் கோப்புக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

அதுமாத்திரமன்றி Giphy தளத்திற்கு விஜயம் செய்பவர்களில் 50 சதவீதமானவர்கள் பேஸ்புக் நிறுவனத்தின் சேவைகளிலிருந்தே விஜயம் செய்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்