பேஸ்புக் தனது பணியாளர்களை மீண்டும் எப்போது அலுவலக பணிக்கு அழைக்கின்றது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாத காலாமாக பல நிறுவனங்களின் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றிவருகின்றனர்.

இவ்வாறு பணியாற்றும் பேஸ்புக் பணியாளர்கள் மீண்டும் எப்போது அலுவலகங்களுக்கு அழைக்கப்படவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜுலை மாதம் அனைவரும் பணிக்கு மீள அழைக்கப்படவுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை Bloomberg வெளியிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பணியாளர்கள் தாம் ஏற்கணவே பணியாற்றிய சூழலை விடவும் வித்தியாசமான சூழலில் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 6 அடி இடைவெளியில் அவர்கள் பணயாற்ற அனுமதிக்கப்படவிருப்பதுடன், சமூக இடைவெளியினை பின்பற்ற முடியாத தருணங்களில் மாத்திரம் முகக்கவசம் அணியுமாறு கேட்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்