கூகுள் நிறுவனம் மீது பாயும் மற்றுமொரு வழக்கு... அதிர வைக்கும் காரணம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்

கூகுள் நிறுவனமானது சாம்சுங் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டொலர்கள் வரையிலான தொகையை அபராதமாக செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியுள்ளதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனத்திற்கு மற்றுமொரு தலைவலி ஏற்பட்டுள்ளது.

அதாவது கூகுள் நிறுவனம் பயனர்களை மிக நுட்பமான முறையில் கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயனர்கள் பயன்படுத்தும் மொபைல் அப்பிளிக்கேஷன்கள் மூலம் இவ்வாறான கண்காணிப்பு இடம்பெறுவதாகவும், அவர்கள் அப்பிளிக்கேஷனை பயன்படுத்திய பின்னர் அதனை மூடிய போதும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைக்காகவே கூகுளிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தொடரப்பட்டுள்ள இவ் வழக்கு முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்