பல பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யும் மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
1415Shares

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் ஆனது பல பணியாளர்களை இடைநிறுத்தம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜுலை மாதம் முதலாம் திகதியிலிருந்து அந்நிறுவனம் புதிய நிதியாண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது.

குறித்த நாளிலிருந்து உலகின் பல்வேறு இடங்களிலும் தனது பல்வேறு குழுக்களிலிருந்தும் இந்த இடைநிறுத்தத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை Business Insider ஆனது கடந்த வாரம் சுமார் 1,000 பணியாளர்களை மைக்ரோசொப்ட் நிறுவனம் இடைநிறுத்தவுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையிலேயே தற்போது குறித்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கியமாக MSN.COM செய்தி தளத்திலிருந்தே பல பணியாளர்கள் நீக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது ஸ்டோர்களை மூடி ஒன்லைன் வியாபாரத்தில் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அண்மையில் செய்தி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்