மொஸில்லா நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை: அதிர்ச்சியில் பணியாளர்கள்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
32Shares

முன்னணி இணைய உலாவிகளில் ஒன்றான ஃபயர்பாக்ஸ் உலாவியை வடிவமைத்த நிறுவனமாக மொஸில்லா காணப்படுகின்றது.

இந்நிறுவனம் தற்போது தனது பணியாளர்களில் குறிப்பிட்ட அளவினரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.

இதன்படி சுமார் 250 பணியாளர்கள் இடைநிறுத்தம் செய்யப்படவுள்ளனர்.

தாய்வானில் தலைநகரான தாய்பேயில் பணியாற்றும் பணியாளர்களும் இதனுள் அடங்குகின்றனர்.

தற்போதைய கொவிட் - 19 நிலமை காரணமாக மொஸில்லா நிறுவனத்தின் வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்தே அந்நிறுவனம் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளது.

இப் பணிக்குறைப்பில் யார் யார் நிறுத்தப்படவுள்ளனர் என்பது தொடர்பான தகவல் அறியாத பணியாளர்கள் தற்போது பதற்றத்தில் காணப்படுகின்றனர்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்