பட்டி தொட்டியெங்கும் மிகவும் பிரபல்யமாக காணப்பட்ட அப்பிளிக்கேஷனாக டிக் டாக் விளங்குகின்றது.
சிறிய அளவிலான வீடியோ டப்பிங் செய்யும் வசதியை தரும் இந்த அப்பிளிக்கேஷனானது அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்த அமெரிக்காவிலுள்ள முன்னணி நிறுவனங்களுக்கு குறித்த அப்பிளிக்கேஷனை விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் இதில் இழுபறி ஏற்படும் நிலையில் தற்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக டிக் டாக் நிறுவனம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள பெடரல் நீதிமன்றத்திலேயே இவ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதேவேளை டொனால்ட் ட்ரம்பின் வற்புறுத்தலின் அடிப்படையிலேயே டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.