டிக் டாக் நிறுவனத்திற்கு மற்றுமொரு அதிர்ச்சி: பதவியை அதிரடி ராஜினாமா செய்த CEO

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
101Shares

சீன நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக டிக் டாக் காணப்படுகின்றது.

இந்நிறுவனத்தின் செயலியானது உலகெங்கிலும் மிகவும் பிரபல்யமாக காணப்படுகின்றது.

இப்படியான நிலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ளமையினால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள டிக் டாக் நிறுவனம் தனது செயலியை வேறு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முனைப்புக்காட்டி வருகின்றது.

எனினும் இது இழுபறி நிலையிலேயே இன்றுவரை காணப்படுகின்றது.

இப்படியிருக்கையில் டிக் டாக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான Kevin Myer தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பான அறிவித்தலை அந்நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்