கொரோனாவினால் Zomato நிறுவனத்தின் நிலை எப்படி இருக்கிறது தெரியுமா?

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
130Shares

கடந்த மார்ச் மாதமளவில் உலகின் பல நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்த ஆரம்பித்திருந்தது.

இதனால் பல நிறுவனங்கள் இழுத்து மூடப்படவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.

எனினும் லொக்டவுன் காரணமாக ஒன்லைன் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது.

இருந்தும் கொரோனா வைரஸ் பரவலாம் என்ற அச்சம் காரணமாக உணவுகளை ஒன்லைனில் ஓடர் செய்வதை மக்கள் அதிகம் தவிர்த்து வந்தனர்.

இதனால் இந்தியாவில் ஒன்லைனில் உணவுகளை ஓடர் எடுத்து டெலிவரி செய்யும் Zomato நிறுவனமும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தது.

எனினும் தற்போது கொரோனாவிற்கு முன்னர் இருந்த நிலையை விடவும் தற்போது வியாபாரம் சூடு பிடித்துள்ளதாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியான தீபிந்தனர் கோயல் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அதாவது கொரோனாவிற்கு முன்னர் இருந்த நிலையை விடவும் 120 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் மாதத்திலிருந்து தற்போதுவரை சுமார் 9.2 கோடி ஒன்லைன் ஓடர்களை Zomato பெற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்