ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவால் ஏமாற்றத்தில் எலன் மொஸ்க்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
208Shares

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் நிறுவுனர் பில்கேட்சினை பின்னுக்கு தள்ளி உலகப் பணக்காரர் வரிசையில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் எலன் மொஸ்க்.

இவர் இலத்திரனியல் கார் வடிவமைப்பான டெஸ்லா மற்றும் விண்வெளிக்கு ஓடங்களை அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் எனும் நிறுவனங்களின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்படுகின்றார்.

அண்மையில் ஆப்பிள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டிலிருந்து தானியங்கி எலக்ட்டரிக் கார் வடிவமைப்பில் காலடி பதிக்கவுள்ளதாக தகவல் வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனத்திற்கு தனது டெஸ்லா நிறுவனத்தினை விற்பதில் ஆர்வம் தெரிவித்திருந்தார் எலன் மொஸ்க்.

எனினும் இதற்கான கலந்துரையாடல் எதுவும் ஆப்பிள் நிறுவனத்துடன் அப்போது மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

தற்போது இதற்கான முயற்சிகளை அவர் எடுத்திருந்த போதிலும் ஆப்பிள் நிறுவனம் அதனை நிராகரித்துள்ளது.

அதாவது ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான டிம் குக்குடன் கலந்துரையாடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன எனினும் அவர் அதனை நிராகரித்துள்ளார் என எலன் மொஸ்க் தனது டுவிட்டர் பக்கத்தினூடாக தெரிவித்துள்ளார்.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்