கணினி வகைகளுள் சூப்பர் கணினிகளே அதிக வினைத்திறன் கொண்டவையாகும்.
இவற்றிலும் வேகம் கூடிய கணினிகளை உருவாக்குவதில் உலகின் முன்னணி நாடுகளுக்கிடையே பலத்த போட்டி காணப்படுகின்றது.
குறிப்பாக சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் பலத்த போட்டி நிலவுகின்றது.
அண்மைக் காலம் வரை முன்னணியில் இருந்த சீனாவை தற்போது அமெரிக்கா பின்னுக்கு தள்ளியுள்ளது.
ஒரு செக்கன்களில் 143.5 பீட்டா பிளாப்களை செய்யக்கூடிய இரு சுப்பர் கணினிகளை உருவாக்கியதன் மூலமே இது சாத்தியமாகியுள்ளது.
IBM தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ் இரு கணினிகளுக்கும் Summit மற்றும் Sierra எனப் பெயரிடப்பட்டுள்ளது.
இதேவேளை அதிவேக சுப்பர் கணினிகளை உருவாக்குவதற்காக அமெரிக்க அரசு 2017 ஆம் ஆண்டில் 258 மில்லியன் டொலர்களை ஒதுக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.