தென்னாபிரிக்காவின் ஜொகானஸ்பேர்க்கில் உள்ள மின்சாரம் வழங்கும் நிறுவனம் ஒன்றின் கணினிகளை ரன்ஸம்வேர் வைரஸ்கள் தாக்கியுள்ளன.
இந்த நிறுவனம் மின்சார துண்டிப்புக்கள் காணப்படும் பகுதிகளை அடையாளம் காணக்கூடிய வகையில் தனது கணினி வலையமைப்பினை உருவாக்கியுள்ளது.
ரன்ஸம்வேர் தாக்கத்தினால் மின்தடைப்பட்டிருந்த பகுதிகளை அடையாளம் காண முடியாது போனமையினால் சில குடியிருப்புக்கள் இருளில் மூழ்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கணினிகளில் புகுந்த குறித்த வைரஸ் ஆனது அனைத்து தரவுத்தளங்கள், அப்பிளிக்கேஷன்கள், வலையமைப்பு என்பவற்றினை என்கிரிப்ட் செய்துள்ளாக அந்த நிறுவனம் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
எனினும் சமூக வலைத்தளங்களின் உதவியுடன் மின் துண்டிக்கப்பட்ட இடங்களுக்கு பின் மின் இணைப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.