மனிதர்களின் உண்மையான மற்றும் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய கணினி மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளானது ஒருவரின் முக அசைவுகளை துல்லியமாக அறிந்துகொண்டு அவர் போலியாக பேசுகின்றாரா அல்லது உண்மையை பேசுகின்றாரா என்பதை கணிக்கக்கூடியதாக இருக்கின்றது.
இதற்காக ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோ பதிவு செய்யக்கூடிய வகையில் குறித்த மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வாய், கன்னம் மற்றும் கண்ணை சுற்றிய பகுதிகள், அவற்றின் அசைவுகளை துல்லியமாக பதிவு செய்கின்றது.
அதன் பின்னர் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப ஒப்பிட்டு ஒருவரின் நிஜத்தன்மையை அடையாளம் காண்கிறது.