ஆரேஞ்சு நிறத்திற்கு மாறும் கணினி திரைகள்: விண்டோஸ் அப்டேட்டில் குறைபாடு

Report Print Givitharan Givitharan in கணணி

விண்டோஸ் கணினிகளில் ஏற்படும் புதிய குளறுபடி தொடர்பான அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது தொழில்நுட்ப உலகில் பரபரப்பாகி வருகின்றது.

விண்டோஸ் இயங்குதளத்தினை அப்டேட் செய்யும்வேளையில் கணினி திரையானது ஆரேஞ்சு நிறத்திற்கு மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது மைக்ரோசொப்ட் நிறுவனம் இறுதியாக அறிமுகம் செய்த விண்டோஸ் 10 இயங்குதளத்தினை அப்டேட் செய்யும்போதே இப் பிரச்னைக்கு பல பயனர்கள் முகம் கொடுத்துள்ளனர்.

இப் பிரச்னை தொடர்பாக மைக்ரோசொப்ட் நிறுவனத்திற்கு பயனர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

அப்டேட் செய்யப்பட்டதன் பின்னர் பயனர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பகிர்ந்துள்ளார்.

இதன்படி அப்டேட் செய்யப்பட்டதன் பின்னர் கணினியை மீள இயக்கியதும் Login திரையானது வழமைபோன்று இருப்பதாகவும், அதன் பின்னர் உள்நுழையும்போது Desktop ஆனது படிப்படியாக சிவப்பு நிறத்திற்கு மாறி இறுதியில் ஆரேஞ்சு நிறத்திற்கு மாறுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது Mouse Pointer மாத்திரம் நிறம் மாறாது வழைமையான நிறத்தில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்