விண்டோஸ் 7 இயங்கு தளப் பாவனையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை

Report Print Givitharan Givitharan in கணணி
118Shares

மைக்ரோசொப்ட் நிறுவனம் கணினிகளுக்கான விண்டோஸ் இயங்குதளத்தினை பல பதிப்புக்களாக வெளியிட்டுவருகின்றது.

இவற்றில் மிகவும் பிரபல்யமான பதிப்பாக விண்டோஸ் 7 காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விண்டோஸ் 8, விண்டோஸ் 8.1, விண்டோஸ் 10 என பதிப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் விண்டோஸ் 7 இயங்குதளத்திற்குரிய பாதுகாப்பு அப்டேட்கள் அனைத்தையும் நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திலிருந்து இது நடைமுறைக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக விண்டோஸ் 7 கணினிகளை மல்வேர்கள் தாக்குதல் மற்றும் ஹேக் செய்தல் என்பன இலகுவாக இருக்கும்.

எனவே பாதுகாப்பு கருதி விண்டோஸ் 10 இயங்குதளப் பதிப்பை அப்கிரேட் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்