தற்காலத்தில் இலத்திரனியல் சாதனங்களின் விற்பனையானது மிக அபாரமாக இடம்பெற்று வருகின்றது.
அதிலும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிக்கொண்டிருக்கும் லேப்டொப், டெக்ஸ்டாப் கணினிகள் உட்பட ஸ்மார்ட் கைப்பேசிகளின் விற்பனையானது முதன்மை பெறுகின்றது.
இப்படியிருக்கையில் இவ் வருடம் உலக அளவில் இடம்பெற்ற லேப்டொப் விற்பனை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி சுமார் 173 மில்லியன் லேப்டொப்கள் உலகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது 9 சதவீத அதிகரிப்பினை காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர இவற்றின் மொத்த பெறுமதியானது 132 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பல்வேறு நிறுவனங்களின் லேப்டொப்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில் Lenovo, HP மற்றும் Dell கணினிகளே 68 சதவீதம் விற்பனையாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.