குட்டி சிலையாக மாற ரெடியா? புதிய தொழிநுட்பம்

Report Print Jubilee Jubilee in கிறியேட்டிவ்
358Shares
358Shares
ibctamil.com

புகைப்படங்களை முப்பரிமாண குட்டி சிலையாக மாற்றும் தொழிநுட்பம் பார்ப்பவர்களை வியக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

தென் கொரிய தலைநகர் Seoul நகரில் ஒரு இடத்தில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி புகைப்படங்களை முப்பரிமாண குட்டி சிலைகளை வடிவமைத்து கொடுக்கின்றனர்.

பொதுவாக செல்ஃபிகளுக்கு அடிமையாகி கிடக்கும் மக்களை இந்த புதிய தொழிநுட்பம் கவர்ந்திழுக்கும் விதமாக அமைந்துள்ளது.

ஒரு அறையில் அமைக்கப்பட்டுள்ள 100 கெமராக்கள் பல முறை படமெடுக்கிறது.

பிறகு இந்த புகைப்படங்கள் கணனிக்கு சென்று gypsum பவுடர் மூலம் குட்டி சிலையாக வடிமைக்க தேவையான வேலைப்பாடுகள் செய்யப்பட்டு முப்பரிமாண சிலை வடிவமைக்கப்படுகிறது.

இதன் விலை 100 டொலரில் இருந்து 300 டொலர் வரை விற்கப்படுகிறது. விலை அதிமாக இருந்தாலும் வாடிக்கையாளர் இதனை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

மேலும் கிறியேட்டிவ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments