டோனியுடன் மோதும் ரெய்னா: ஐபிஎல் தொடரில் விறுவிறு

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
டோனியுடன் மோதும் ரெய்னா: ஐபிஎல் தொடரில் விறுவிறு

ஐபிஎல் 9வது தொடரில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான புனே அணியும், ரெய்னா தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட்டில் 8 ஆண்டுகளாக ஒரே அணியில் விளையாடி வந்த டோனியும், ரெய்னாவும் இன்று நேருக்கு நேர் மோத இருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக வெற்றிகளை குவித்து வந்த டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வீரராக வலம் வந்தவர் ரெய்னா. தவிர டோனிக்கு அவர் சிறந்த நண்பர்.

தற்போது துரதிர்ஷ்டவசமாக சென்னை அணிக்கு சூதாட்ட பிரச்சினையில் 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் நண்பர்களாக வலம் வந்த இருவரும் எதிரெதிர் அணிக்கு மாற வேண்டியதாகி விட்டது.

இருவரும் 8 ஆண்டுகளாக நெருங்கிப் பழகியதால் இருவருக்கும் பலம்- பலவீனம் நன்றாக தெரியும். இது இன்றைய ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

மேலும், சென்னை அணிக்காக ஆடிய பிரன்டன் மெக்கல்லம், வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ரெய்னா தலைமையிலான குஜராத் அணியில் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இவர்கள் டோனியின் அணுகுமுறையை நன்கு அறிந்தவர்கள் என்பதால் புனே அணிக்கு தொல்லை கொடுக்க வாய்ப்பு உள்ளது.

டோனி தலைமையிலான புனே அணி தனது முதல் ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை எளிதில் தோற்கடித்தது.

அதேபோல் குஜராத் அணி தனது முதல் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை வீழ்த்தியது.

இந்நிலையில் வலுவான இந்த 2 அணிகளும் 2வது வெற்றியை பெறும் முனைப்புடன் வரிந்து கட்டிக் கொண்டு நிற்க்கும் என்பதால் இன்றையப் போட்டியில் சுவாரஸ்யத்துக்கு குறைவிருக்காது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments