இந்தியாவிடம் தோற்க நானே காரணம்: புலம்பித் தீர்க்கும் வங்கதேச வீரர் மகமதுல்லா

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
இந்தியாவிடம் தோற்க நானே காரணம்: புலம்பித் தீர்க்கும் வங்கதேச வீரர் மகமதுல்லா

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் தன்னுடைய தவறினால் தான் இந்தியாவின் தோற்க நேரிட்டதாக வங்கதேச வீரர் மகமதுல்லா கூறியுள்ளார்.

டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா- வங்கதேசம் அணிகள் மோதின.

இதில் வங்கதேசத்தின் வெற்றிக்கு கடைசி ஓவரில் கடைசி 3 பந்துக்கு2 ஓட்டங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் வங்கதேச தேச வீரர்கள் முஷ்பிகுர், மகுமதுல்லா சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி பந்தில் 1 ஓட்டங்கள் கூட எடுக்க முடியாமல் ரஹ்மானும் ஆட்டமிழக்க, இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. இந்த தோல்வி வங்கதேச வீரர்களை அதிகமாக பாதித்துள்ளது.

சமீபத்தில் வங்கதேச அணித்தலைவர் மோர்டசா அன்று இரவு வீரர்கள் யாரும் உணவு கூட எடுத்துக் கொள்ளவில்லை என்று தெரிவித்தார்.

தற்போது அந்த அணியின் துடுப்பாட்ட வீரர் மகமதுல்லா அந்த தோல்விக்கு தானே காரணமாகி விட்டதாக புலம்பியுள்ளார்.

அவர் கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி மறக்க முடியாதது. முஷ்பிகுர் 2 பவுண்டரிகள் அடித்த நிலையில் உடனே ஆட்டமிழப்பார் என்று நினைத்து பார்க்கவில்லை.

அடுத்து நானும் ஆட்டமிழப்பேன் என்று கற்பனையிலும் நினைக்கவில்லை. அதன் பின்னரும் வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. இது அனைத்திற்கும் நானே பொறுப்பு.

அவசரத்தில் முட்டாள் தனமாக செய்தது அணிக்கு தோல்வியைத் தேடித்தந்துள்ளது. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments