எதிரணியை வீழ்த்த வங்கதேச வீரர்களுக்கு வித்தையை கற்றுக் கொடுக்கும் முரளிதரன்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
எதிரணியை வீழ்த்த வங்கதேச வீரர்களுக்கு வித்தையை கற்றுக் கொடுக்கும் முரளிதரன்

வங்கதேச உள்ளூர் அணியில் அதிக அளவில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் முயற்சியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் களமிறங்கி உள்ளது.

சமீப காலமாக வங்கதேச அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. ஆதிக்கம் செலுத்தும் பெரிய பெரிய அணிகளை கூட அதிர வைத்து வேடிக்கை பார்த்தது.

இந்த நிலையில் வங்கதேச அணியை மேலும் வலுவாக்க பல நடவடிக்கைகளை வங்கதேச கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது.

இதன்படி வங்கதேச உள்ளூர் அணியில் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை உருவாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள கிரிக்கெட் வாரியம், ஒரு கிரிக்கெட் முகாமை நடத்த திட்டமிட்டுள்ளது.

இந்த முகாமில் உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு இளம் வீரர்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், அவுஸ்திரேலியா சுழற்ஜாம்பவான் ஷேன் வார்னே ஆகியோர்களின் உதவியை நாடியுள்ளது.

இந்த தகவலை வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் அக்ரம் கான் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments