அசாத்தியமாக இறங்கி அடித்த கோஹ்லி!

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
அசாத்தியமாக இறங்கி அடித்த கோஹ்லி!
919Shares
919Shares
ibctamil.com

அதிரடி ஆட்டக்காரரும் அதே சமயத்தில்ஆக்ரோஷ ஆட்டக்காரருமான கோஹ்லி இந்த ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கையால் ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார்.

அப்படி என்ன செய்தார் கோஹ்லி?

  • ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோஹ்லியின்ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது.
  • இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
  • 9-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் கோஹ்லி 4-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
  • இந்த சீசனில் 13 ஆட்டங்களில் ஆடி4 சதம், 5 அரைசதம் உள்பட 865 ரன்கள் (சராசரி 86.50) சேர்த்துள்ளார். ஒரு ஐ.பி.எல்.தொடரில் 800 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர் தான்.
  • முதல் 8 ஐ.பி.எல். தொடர்களில் ஒரு சதம் கூட எடுக்காத விராட் கோலி, தற்போதைய 9-வது ஐ.பி.எல். போட்டியில் மட்டும்4 சதங்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார்.
  • இதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரு தொடரில்4 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் பிளாஸ்ட் 20 ஓவர் போட்டியில் 2015-ம் ஆண்டில் மைக்கேல் கிளைஞ்சர் (அவுஸ்திரேலியா) 3 சதங்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது.
  • ஐ.பி.எல். போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு (5 சதம்) அடுத்த இடத்தில் கோஹ்லி இருக்கிறார்.
  • ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் விராட் கோஹ்லி இதுவரை 2,042 ரன்கள் (65 ஆட்டம்)திரட்டியிருக்கிறார். 20 ஓவர் போட்டியில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற மகிமையை வசப்படுத்தியிருக்கிறார்.
  • முதல் 3 சதங்களை முறையே 63,56, 53 பந்துகளில் ருசித்த விராட் கோஹ்லி இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் அடைந்து அசத்தினார்.
  • ஐ.பி.எல். போட்டியில் அதிவேகமாக சதம் கண்ட அணித்தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது. 2011-ம் ஆண்டு டெக்கானுக்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இறங்கிய ஷேவாக் 48 பந்துகளில் சதம் விளாசியதே அணித்தலைவராக ஒரு வீரரின் மின்னல் வேக சதமாக இருந்தது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments