பவுன்சரை இப்படிதான் ஆட வேண்டும்! டோனிக்கே கிரிக்கெட் சொல்லி கொடுத்த நடுவர்

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
பவுன்சரை இப்படிதான் ஆட வேண்டும்! டோனிக்கே கிரிக்கெட் சொல்லி கொடுத்த நடுவர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான டோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை போல டெஸ்ட் போட்டி எளிதாக அமையவில்லை.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் எதிரணியை கதிகலங்க வைக்கும் டோனி டெஸ்ட் போட்டிகளில் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்ள தடுமாறினார்.

இதனாலே அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் நமக்கு டெஸ்ட் சரிவராது என்று பாதியிலே ஓய்வு அறிவித்துவிட்டார் டோனி.

கடந்த 2014ம் ஆண்டு பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வேகத்தாலும் பவுன்சர் பந்துகளாலும் இந்திய அணியை மிரட்டினர்.

இந்த நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஹாசல்வுட், மிட்செல் ஜான்சன் ஆகியோர் இந்திய அணித்தலைவர் டோனியை பவுன்சர் பந்துகளால் தாக்க ஆரம்பித்தனர்.

ஆனால் டோனியும் அதை எதிர்கொள்ளாமல், ஆட்டமிழந்து விடக் கூடாது என்பதற்காக அப்படியே உடம்பில் வாங்கிக் கொண்டிருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் களநடுவர் மார்சிஸ் எரஸ்மஸ் டோனிக்கு பவுன்சர் பந்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்று சொல்லி கொடுத்தார். பவுன்சர் பந்துகளை குனிந்து விட்டுவிடுமாறு டோனிக்கு அவர் அறிவுறித்தினார்.

பிரிஸ்பேனில் நடந்த டெஸ்டில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments