இங்கிலாந்து அசத்தல் வெற்றி: இலங்கை படு தோல்வி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
இங்கிலாந்து அசத்தல் வெற்றி: இலங்கை படு தோல்வி

இலங்கைக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 122 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை சென்ற இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது, முதல் 4 நாள் ஆட்டங்களின் முடிவில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகித்தது.

ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி கார்டிப் நகரில் நேற்று நடைபெற்றது, இதில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

இங்கிலாந்து அணி சார்பில் நல்ல துவக்கத்தை ஜேசன் ராய்(34) ஏற்படுத்திக்கொடுத்தார், ஜேம்ஸ் வின்ஸ்(51) அரைசதம் அடித்தார், அணித்தலைவர் இயான் மார்கன்(20), ஜாஸ் பட்லர்(70), ஜோ ரூட்(93) ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.

இங்கிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 324 ஓட்டங்கள் குவித்தது, இலங்கை சார்பில் குணதிலகா 3 விக்கெட் வீழ்த்தினார்.

இலங்கை அணியின் சார்பில் அணித்தலைவர் மேத்யூஸ்(13) பெரிதாக சோபிக்கவில்லை, குசால் பெரேரா(6), குசால் மெண்டிஸ்(22), பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குணதிலகா(48) மற்றும் சண்டிமால்(53) ஓட்டங்கள் எடுத்து அணிக்கு ஆறுதல் அளித்தார்.

இலங்கை அணி 42.2 ஓவரில் 202 ஒட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது, இங்கிலாந்து சார்பில் டேவிட் வில்லே 4, பிளங்கட் 3 விக்கெட்டை கைப்பற்றினர்.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 புள்ளிகள் கணக்கில் கிண்ணத்த கைப்பற்றியது, இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments