அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன்: மேத்யூஸ்

Report Print Basu in கிரிக்கெட்
அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன்: மேத்யூஸ்

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் பதவியை விட்ட ஓட மாட்டேன், அதை தவிர்த்து தற்போது உள்ள அணியை மேலும் சிறப்பாக செயல்பட உதவுவேன் என அணித்தலைவர் மேத்யூஸ் நம்பிக்கை தெரிவத்துள்ளார்.

இலங்கிலாந்திடம் ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி கண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இங்கிலாந்து அணியிடம் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை முழுமையாக இழந்துள்ளது.

இதுகுறித்து இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் கூறியதாவது, தற்போது எனக்கும் எங்கள் அணிக்கும் மோசமான நேரம், அதனால் நான் அணித்தலைவர் பதவியை விட்டு ஓட மாட்டேன். இதை எதிர்த்து போராடுவேன்.

எங்கள் அணியில் எனக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல நல்ல வீர்ர்கள் உள்ளனர், நிச்சயமாக விரைவில் இந்த மோசமான நிலையிலிருந்து அணியை வெளிக் கொண்டு வருவேன் என உறுதியளித்துள்ளார்.

2013ம் ஆண்டு முதல் இலங்கை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் தலைவராக திகழ்ந்து வரும் மேத்யூஸிற்கு, இந்த ஆண்டு தொடக்கம் முதல் 20 ஒவர் அணிதலைவர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...

Comments