கும்பளேவின் பயிற்சியால் சிறப்பாக விளையாடுவோம்: கோஹ்லி

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
கும்பளேவின் பயிற்சியால் சிறப்பாக விளையாடுவோம்: கோஹ்லி

ஒருநாள் டெஸ்ட் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ள விராட் கோஹ்லி, எங்கள் அணியின் குறிக்கோள் சிறப்பாக விளையாட வேண்டும் என்பேதே ஆகும் என கூறியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடவிருக்கும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளின் அணித்தலைவர் கோஹ்லி கூறியதாவது, புதிய பயிற்சியாளர் கும்பளேவின் தலைமையில் நாங்கள் ஆடவிருக்கும் ஆட்டம் என்பதால் சிறப்பாக விளையாடவிருக்கிறோம்.

அதுமட்டுமின்றி, தரவரிசையில் இடம்பிடித்தல் என்பது வீரர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும், ஆனால் அதனையும் தாண்டி எங்கள் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை ஈட்டுவதிலேயே முனைப்புடன் செயல்படுவோம்.

மேலும், முகமது ஷமி மீண்டும் ஆர்வத்துடன் விளையாட வருவது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

இந்திய அணி நாளை மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. 9-ஆம் திகதி முதல் 10-ஆம் திகதி வரையிலும் , 14-ஆம் திகதி முதல் 16-ஆம் திகதி வரையிலும் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இதையடுத்து, முதல் தொடர் 21-திகதி நார்த் சவுண்டில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments