MTCL-ன் ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள் விபரம்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
MTCL-ன் ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள்  விபரம்
85Shares

மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் கோடைகால மென்பந்து போட்டித்தொடரின் ஜெய்சுரேஷ் ஜெகநாதன்(Jeysuresh Jeganthan)னால் அனுசரணை செய்யப்படுவதும், மிகவும் சிறப்புமிக்கதும், பாரம்பரியதுமான MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் ஐந்தாவது வார சுற்றுப்போட்டிகள் கடந்த 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை (July 10th) ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் இடம்பெற்றது.

இந்த வாரப்போட்டிகளை பீ-ரவுன் பாய்ஸ் துடுப்பாட்ட(B-Town Boyz CC) அணியும், சௌகா பாய்ஸ் துடுப்பாட்ட (SaugaBoyz CC) அணியும் பொறுப்பேற்று நடத்தினர்.

இந்த வாரப்போட்டிகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன் நேர அட்டவணையை கடைப்பிடித்து உரிய நேரத்தில் முடிக்கப்பட்டது. போட்டிகளை சிறந்த முறையில் நடத்தி முடிக்க உதவிய இரு அணியினருக்கும் MTCL அமைப்பினர் தமது நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

MTCL Super League Challenge Trophy போட்டித்தொடரின் நான்காவது வாரத்தில் இடம்பெற்ற போட்டிகளிலும் தனது துடுப்பாட்ட திறனை சிறந்த முறையில் வெளிப்படுத்தி அதிக ஓட்டங்களைப் பெற்றவர்கள் பட்டியலில் தன்னுடைய முதலாம் இடத்தை, இந்த வாரமும் தக்கவைத்துக்கொண்ட வீரரான Cougars துடுப்பாட்ட அணியை சேர்ந்த தர்ஷன் ரத்னசபாபதி(Tharshan Ratnasapapathy) அவர்கள் செம்மஞ்சள் நிறத்(ORANGE CAP) தொப்பியை தன்வசம் வைத்துக்கொண்டதுடன் , அதிக ஆட்டமிழப்புக்களை எடுத்து கடந்த இரண்டு வாரங்களாக முன்னிலையில் இருந்த வீரரான Cheetahs துடுப்பாட்ட அணியை சேர்ந்த ஆனந்த் மணிமாறன்(Ananth Manimaran) அவர்கள் தொடர்ந்து மூன்றாவது வாரமாக, இந்தவாரமும் ஊதா நிறத் (PURPLE CAP) தொப்பியினை தன்வசம் தக்கவைத்துக்கொண்டமை இந்த வாரச் சிறப்பம்சங்களில் ஒன்றாகும்.

ஐந்தாவது வாரத்தின் பிரதான (PREMIUM GAME) போட்டிக்கு வெளிநாடுகளுக்கு குறைந்த கட்டணத்தில் விமானச்சீட்டுக்களை வழங்குவதில் முன்னோடியாகத் திகழும் JET TRAVELS நிறுவனத்தினர் பிரதான அனுசரணை வழங்கி இருந்தனர்.

இந்த வாரத்தின் பிரதான(PREMIUM GAME) போட்டியாக Blue Birds துடுப்பாட்ட அணியும், BNS துடுப்பாட்ட அணியும் மோதிக்கொண்ட போட்டி தெரிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் நேரடி போட்டிநிலவரங்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்த்து மகிழக்கூடிய சர்ந்தர்ப்பத்தையும் MTCL அமைப்பினர் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற BNS அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தனர். அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய Blue Birds அணி தமது 15 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுக்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றனர்.

துடுப்பாட்டத்தில் Blue Birds அணியை சேர்ந்த மருஷன் சித்திரவடிவேல்(Marusan Sithiravadivel) 37 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் BNS அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) சிறந்த முறையில் பந்து வீசி 3 ஓவர்களில் 29 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய BNS அணி 13.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று 27 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவினர். துடுப்பாட்டத்தில் BNS அணியை சேர்ந்த ஜெயஹரன் ஜெயக்குமார்(Jeyaharan Jeyakumar) 24 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் BlueBirds அணியின் தலைவர் தீசன் சுப்பையா(Theesan Suppiah) சிறந்த முறையில் பந்து வீசி 2.2 ஓவர்களில் வெறும் 07 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். போட்டியின் ஆட்டநாயகனாக துடுப்பாட்டத்தில் தனது பங்களிப்பை செய்த BlueBirds அணியை சேர்ந்த மருஷன் சித்திரவடிவேல்(Marusan Sithiravadivel) தெரிவுசெய்யப்பட்டார்.

இவ்வாரத்தின் சிறந்த விளையாட்டு செயல்திறன்கள்(Performance) கீழே உள்ளடக்கப்பட்டுள்ளன.

சிறந்த துடுப்பாட்டம்(BEST BATTING)

பரன்தாமன் செல்வரத்தினம்(Paranthaman selvaratnam) of Cougars CC - 65 ஓட்டங்கள் VS GPS CC

ஜதுர்ஷன் நாதன்(Jathursan Nathan) of Cheetahs CC - 53 ஓட்டங்கள் VS Inuvil Boys CC

மிராஜ் தேவநாதன்(Mirajh Thevanthan) of GPS CC - 46 ஓட்டங்கள் VS BNS CC

ரஜித் சரச்சந்திரா(Rajith Sarathchandra) of Toronto Blues CC - 44 ஓட்டங்கள் VS Western CC

குகதீபன் சதானந்தனேசன்(Kugatheepan Sathananthanesan) of BlueBirds CC - 43 ஓட்டங்கள் (N.O) VS Cougars CC

சிறந்த பந்துவீச்சு(BEST BOWLING)

வினோத் சண்முகலிங்கம்(Vinoth Shanmugalingam) of BlueBirds CC - 6

ஆட்டமிழப்புக்கள் VS Cougars CC (2.2-0-19-6)

சிறந்த பிடியெடுப்புக்கள்(BEST CATCHES)

ஸ்ரீதர்ஷன் ஸ்ரீகாந்தன்(Sridharshan Srikanthan) OF Cougars CC VS BlueBirds CC

அமுதன் திரு(Amuthan Thiru) of Warriors CC VS Youngstars CC

கோகுல் கிரீஷ்(Gokul Gireesh) of Toronto Blues CC CC VS GPS CC

மன்சூர் கமல் பாஷா(Mansoor Kamal Baasha) of Blue Birds CC VS BNS CC

நிஷாந்தன் இலங்கேஸ்வரன்(Nisanthan Ilangeswaran) of BNS CC VS BlueBirds CC

கிருபா தம்பிரத்னம்(Kirupa Thambiratnam) of Cougars CC VS Chola CC

பிரகாஷ் புஷ்பராஜா(Prakash Pushparajah) of Blue Birds CC VS BNS CC

பிரஷாந்த் ஸ்ரீகாந்தன்(Prashanth Srikanthan) OF Cougars CC VS BlueBirds CC

ரஜித் சரச்சந்திரா(Rajith Sarathchandra) of Toronto Blues CC VS GPS CC

குமரன் கந்தையா(Kumaran Kandiah) of Warriors CC VS Toronto Blues CC

ராஜீவ் மோகன்(Rajeev Mohan) of Warriors CC VS Toronto Blues CC

விபூஷனன் அரவிந்தநாதன்(Bibushanan Aravindanathan) of BNS CC VS Youngstars CC

அயன் சிவராஜா(Ayan Sivarajah) of Youngstars CC VS Warriors CC

சசீபன் நாகராசன்(Saseepan Nagarajan) of Cheetahs CC VS Inuvil Boys CC

மேலதிக தொடர்புகளுக்கு www.mtcl.info

இந்நிகழ்வுக்கு லங்காசிறி ஊடக அனுசரனை வழங்குகிறது. உங்களுடைய படைப்புகளுக்கும் ஊடக அனுசரணை வேண்டும் என்றால் pr@lankasri.com மின்னஞ்சலை தொடர்பு கொள்ளவும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments