எனது பலம் எனக்கு தெரியும்? இஷாந்த் ஷர்மா

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
எனது பலம் எனக்கு தெரியும்? இஷாந்த் ஷர்மா
186Shares

டெஸ்ட் போட்டிகளில் எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.

இந்த போட்டியில் விளையாடவிருக்கும் இஷாந்த் ஷர்மா தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், நம்மிடம் உள்ள சில விடயங்களை நேர்மறையாக ஏற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.

எனது ஆட்டத்தில் அவ்வப்போது சிறு சிறு ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன, நாம் விளையாடுகையில் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தான் விளையாட வேண்டும் என்பது அவசியமில்லை.

வெவ்வேறு வடிவங்களில் நமது ஆட்டத்தினை வெளிப்படுத்தினால், எது சரி, எது தவறு என்பதை அறிந்துகொள்ள முடியும், மேலும் நான் டெஸ்ட் போட்டிகளில் நன்றாக ஆடவில்லை என்பது எனக்கு தெரியும்.

இருப்பினும் நல்ல முறையில் பயிற்சி எடுத்துள்ளேன், எல்லோருக்கும் ஒவ்வொரு பலம் இருக்கும். அதுபோல எனது பலம் என்ன என்பது எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் இஷாந்த் ஷர்மா 22 விக்ட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments