அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசிய கோஹ்லி: இந்தியா 304 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
அதிரடி ஆட்டத்தால் சதம் விளாசிய கோஹ்லி: இந்தியா 304 ஓட்டங்கள் குவிப்பு
561Shares
561Shares
ibctamil.com

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அணித்தலைவர் விராட் கோஹ்லி சதம் அடிக்க இந்திய அணி முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்துள்ளது.

நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணியின் துவக்க வீரர் முரளி விஜய் 7 ஓட்டங்கள் எடுத்த போது, கேபிரியலின் பவுன்சரில் சிக்கினார். பின் தவானுடன் புஜாரா இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, 16 ஓட்டங்கள் எடுத்த போது புஜரா, பிஷூ ‛சுழலில்' சிக்கினார்.

துவக்க வீரர் தவான், டெஸ்ட் அரங்கில் தனது 3வது அரைசதம் எட்டினார். மறுபுறம் கோஹ்லி துரிதமாக ஓட்டங்கள் சேர்க்க, உணவு இடைவேளைக்குப் பின் இந்திய அணியின் ஓட்டங்கள் வேகம் அதிகரித்தது.

கேப்ரியல் ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடித்த தவான், 84 ஓட்டங்களில் பிஷூ ‛சுழலில்' சிக்கி சதமடிக்கும் வாய்ப்பை இழந்தார். கோஹ்லி டெஸ்ட் அரங்கில் 13வது அரைசதம் அடித்தார்.

தேநீர் இடைவேளைக்குப் பின் கேப்ரியலின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்த ரகானே, பிஷூவின் ஓவரிலும் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விரட்டினார்.

ஆனால் அவர் அதிரடி அதிக நேரம் நீடிக்கவில்லை. 22ஓட்டங்கள் எடுத்த நிலையில், பிஷூவின் சுழலில் சிக்கிய ரகானே பெவிலியன் திரும்பினார். அடுத்து இறங்கிய அஸ்வின் நிதானமாக விளையாட, மறுபுறம் கோஹ்லி அதிரடியாக ஓட்டங்கள் குவித்தார்.

பரத்வைட் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு ஓட்டம் எடுத்த கோஹ்லி 134 பந்தில் சதத்தை எட்டினார். இது அவரது 12வது சதம்.

சதமடித்த பின் அதிரடியாக விளையாடிய கோஹ்லி, பிஷூவின் பந்தில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளும், சேஷின் ஓவரில் ஒரு பவுண்டரியும் அடித்தார். மறுபுறம் அஸ்வின் விக்கெட்டை பறிகொடுக்காமல் நிதானப் போக்கை கடைபிடித்தார்.

முதல்நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 304 ஓட்டங்கள் குவித்தது. கேப்டன் கோஹ்லி 143 ஓட்டங்களுடனும்(197 பந்துகள், 16 பவுண்டரி), அஷ்வின் 22 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேற்கிந்திய தரப்பில் பிஷூ 3 விக்கெட்டுகளும், கேப்ரியல் ஒரு விக்கெட்டும் கைபற்றினர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments