புதிய மைல்கல்லை எட்டிய அலைஸ்டர் குக்!

Report Print Basu in கிரிக்கெட்
புதிய மைல்கல்லை எட்டிய அலைஸ்டர் குக்!

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் சதம் அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணித்தலைவர் அலைஸ்டர் குக் 29 சதங்களுடன் டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்துள்ளார்.

இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராஃப்போர்டில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தேர்வு செய்தது.

தொடக்க வீரராக களம் இறங்கிய அலைஸ்டர் குக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 157 பந்தில் 14 பவுண்டரியுடன் 100 ஓட்டங்களை தொட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டிகளில் 29-வது சதத்தை பதிவு செய்தார்.

அத்துடன் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சர் டொனால்டு பிராட்மேன் சாதனையை சமன் செய்தார்.

பிராட்மேன் 1928 முதல் 48 வரை சுமார் 20 ஆண்டுகள் 52 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 80 இன்னிங்சில் 29 சதங்கள் அடித்தார். தற்போது குக் 131 போட்டிகளில் விளையாடி 234 இன்னிங்சில் 29 சதங்கள் அடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments