இந்திய வீரர்கள் டாப்!

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு கபில்தேவ், கவாஸ்கர், டெண்டுல்கர், கும்ப்ளே, கோஹ்லி போன்ற திறமை வாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் உள்ளதால் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும் தங்கள் திறமையை நிரூபித்து கொண்டுதான் இருக்கின்றனர், இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியை சமூக வலைதளங்களில் பின்பற்றுவோர் எண்ணிக்கை பின்வருமாறு, இந்திய அணியை புள்ளி விவரப்படி முகநூலில் 26 மில்லியன் ரசிகர்களும், ட்விட்டர் பக்கத்தில் 2.6 மில்லியனாகவும், இன்ஸ்டாகிராமில் 1.6 ரசிகர்களும் பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

இந்திய அணிக்கு அடுத்த வரிசையில் வங்காளதேச அணியை 10 மில்லியன் ரசிகர்கள் பின்பற்றுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் மற்ற வெளிநாட்டு அணியினருக்கு கிடைக்காத பெருமை நம் இந்திய அணிக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments