முத்தையா முரளிதரன் பிடிவாதகாரன்: உண்மையை உடைத்த ஜெயவர்த்தனே

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

முத்தையா முரளிதரன் எப்போதும் தற்காப்பு மனநிலையை கொண்டவர் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே வெளிப்படையாக கூறியுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரன் விடயத்தில் அவரை ஊக்குவிப்பது தனக்கு சவாலாக இருந்ததாக ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.

பிரபல இணையத்தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், நான் இலங்கை அணியின் தலைவராக இருந்த போது முரளிதரனை தற்காப்பு மனநிலையில் இருந்து வெளியே கொண்டு வருவது சவாலாக இருந்தது.

இருப்பினும் அவரது அந்த குணம் அவரை எந்த நிலையிலும் கீழே தள்ளிவிடவில்லை. நான் மாறுபட்ட தலைவராக இருந்தேன்.

அவர் தாக்குதல் பந்துவீச்சாளராக இருப்பதையே நான் விரும்பினேன். அதற்கு அவரை நான் அதிகமாக சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அவர் கொஞ்சம் பிடிவாதம் பிடித்தவர்.

அவருக்கான வாய்ப்புகளை உருவாக்கி தருவதில் நான் முனைப்புடனே இருந்தேன். அர்ஜூன ரணதுங்காவும் இதே முறையை தான் முரளிதரனிடம் பின்பற்றி இருப்பார் என்று நினைக்கிறேன்.

ஆனால் சனத் ஜெயசூரியாவுக்கு இது கடினமான வேலையாக இருந்தது. ஆனால் நான் முரளிதரனை எப்போதும் ஊக்கமளித்து அவரின் முழுத்திறமையும் வெளிக் கொண்டு வருவதில் கவனம் செலுத்தியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments