மிரள வைத்த வீரர்கள் இவர்கள் தான்! கங்குலி வெளியிட்ட அணி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்
மிரள வைத்த வீரர்கள் இவர்கள் தான்! கங்குலி வெளியிட்ட அணி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி தனது ஆல் டைம் லெவன் (All Time XI) அணியை வெளியிட்டுள்ளார்.

இதில் இந்திய அணியின் சுழற்பந்து ஜாம்பவான் கும்ப்ளேவுக்கு அவர் இடமளிக்கவில்லை.

அதேபோல் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான்கள் ரிச்சட்ஸ், லாரா ஆகியோருக்கும் இடம் இல்லை.

இந்த அணியின் தலைவராக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங்கை தெரிவு செய்துள்ளார்.

விக்கெட் கீப்பராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காராவை நியமித்துள்ளார்.

சுழலுக்கு முன்னாள் ஜாம்பவான்கள் முரளிதரன், வார்னே ஆகியோரும், வேகத்திற்கு ஸ்டெய்ன், மெக்ராத் ஆகியோரையும் தெரிவு செய்துள்ளார்.

இந்த அணியில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு சகலதுறை வீரர் தென் ஆப்பிரிக்காவின் காலிஸ் தான்.

கங்குலியின் கனவு அணி

மாத்யூ ஹெய்டன் (அவுஸ்திரேலியா), அலெஸ்டர் குக் (இங்கிலாந்து), ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் (இந்தியா), காலிஸ் (தென்ஆப்பிரிக்கா), குமார் சங்கக்காரா (இலங்கை), ரிக்கி பொண்டிங் (தலைவர் - அவுஸ்திரேலியா), மெக்ராத் (அவுஸ்திரேலியா), டேல் ஸ்டெய்ன் (தென்ஆப்பிரிக்கா), ஷேன் வார்னே (அவுஸ்திரேலியா), முரளிதரன் (இலங்கை).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments