மீண்டும் வீழ்ந்தது பாகிஸ்தான்: இங்கிலாந்து அபார வெற்றி

Report Print Jubilee Jubilee in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 3வது டெஸ்டில் இங்கிலாந்து 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து – பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 297 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் கேரி பேலன்ஸ் அதிகபட்சமாக 70 ஓட்டங்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியின் சொஹாலி கான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி, அசார் அலியின் அபார சதத்தால் (139) 400 ஓட்டங்கள் குவித்தது.

பின்னர் 103 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது

அனைத்து வீரர்களும் சீரான ஓட்டங்கள் குவிக்க அந்த அணி 4வது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 414 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 5வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் கூடுதலாக 4 ஓவர்கள் ஆடிய இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்சை 6 விக்கெட்டுக்கு 445 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ‘டிக்ளேர்’ செய்தது.

இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு 343 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சற்று கடின இலக்கை நோக்கி 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 70.5 ஓவர்களில் 201 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன் மூலம் இங்கிலாந்து அணி 141 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணியின் சார்பாக அதிகபட்சமாக சமி அஸ்லாம் 70 ஓட்டங்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ், ஸ்டீவன் பின், மொயீன் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி எதிர்வரும் 11ம் திகதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments