இந்தியர்களின் இதயங்களை திருடிய மேத்யூ ஹேடன்!

Report Print Basu in கிரிக்கெட்

முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹேடன், இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியர்களின் இதயத்திற்கு இதமளிக்கும் வகையில் தனது சுதந்திர தின வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ள மேத்யூ ஹேடன், தற்போது தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு சென்று கிரக்கெட் விளையாட்டை ஊக்குவித்து வருகிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரராக திகழ்ந்த காலம் முதலே இந்திய மக்களின் மேல் வைத்திருக்கும் அன்பை தொடர்நது வெளிபடுத்தி வருபவர் ஹேடன். குறிப்பாக சென்னை மக்களின் மேல் அதிக அன்பு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

தனது சொந்த ஊராக கருதும் சென்னை மீது வைத்துள்ள அன்பை அவர் வெளிபடுத்தாத இடமே இல்லை.

இந்நிலையில் , இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது தாய் நாட்டின் சுதந்திர தினமாக கருதி இந்தியாவின் சுதந்திர தினத்தை கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய ரசிகர்களின் இதயங்களுக்கு இதமளிக்கும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments